வெளிநாட்டில் கணவரை தேடிச் சென்ற இந்திய இளம் பெண்ணுக்கு செயற்கை சுவாசம்: 6 மாதமாக கவலைக்கிடம்

Report Print Arbin Arbin in மத்திய கிழக்கு நாடுகள்

ஐக்கிய அமீரகத்தின் துபாயில் தனது கணவரைப் பார்க்க சென்ற இந்திய பெண் ஒருவர் மூளை காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு கடந்த 6 மாதமாக செயற்கை சுவாசத்தினால் உயிர் வாழ்ந்து வரும் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்தியாவில் கணவரால் கைவிடப்பட்ட பிந்து லலிதா என்ற பெண், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சென்று சிறுசிறு வேலைகள் செய்து அதில் கிடைத்த வருமானத்தில் தனது இரண்டு குழந்தைகளையும் வளர்த்துள்ளார்.

தற்போது அங்குள்ள தையல்கடையில் அவர் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது மகள் 20 வயதான நீத்து ஷாஜி பணிக்கரை சார்ஜாவில் பணியாற்றி வரும் ஜிதின் என்பவருக்கு கடந்தாண்டு திருமணம் செய்து வைத்துள்ளார்.

இந்நிலையில், இந்தியாவில் இருந்து கடந்த ஜனவரி மாதம் கணவரைப் பார்க்க அமீரகம் சென்ற நீத்துவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு காரணமாக நீத்துவின் ஆரோக்கியமான மூளை செல்கள் தானாக செயல் இழந்து மூளையில் வீக்கம் ஏற்பட்டுள்ளதை கண்டறிந்தனர்.

இதையடுத்து, மூளை காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட அவரை அபுதாபியில் உள்ள ஷேக் கலிபா மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர் கடந்த மார்ச் மாதம் முதல் செயற்கை கருவி மூலம் சுவாசித்து வருவதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மட்டுமின்றி, விமானத்தில் பயணம் மேற்கொள்ளும் நிலையிலும் அவர் இல்லை என்பதால், நீத்துவின் தாயார் பரிதவித்து வருகிரார்.

இருப்பினும், தமது மகளை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு சென்று அடுத்த கட்ட சிகிச்சையை மேற்கொள்ள இருப்பதாக அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்