ஈரானை தொட நினைத்தாலே.. எந்தவொரு நாடும் இப்படி மாறிவிடும்: உலக நாடுகளை எச்சரித்த ராணுவ தளபதி

Report Print Basu in மத்திய கிழக்கு நாடுகள்

ஈரானை தாக்கும் எந்தவொரு நாடும் பிரதான போர்க்களமாக மாறும் என ஈரானின் புரட்சிகர காவலர்களின் தளபதி எச்சரித்துள்ளார்.

எண்ணெய் நிலையங்கள் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க ராணுவப் படைகளை சவுதிக்கு அனுப்ப டிரம்ப் ஒப்புதல் அளித்ததை அடுத்து ஈரான் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தெஹ்ரானில் நடைபெற்ற செய்தியாளர் சந்தப்பில் தளபதி ஹொசைன் சலாமி கூறுகையில், தங்கள் நிலம் பிரதான போர்க்களமாக மாற விரும்புபவர் தாக்குதல் நடத்த முன்வாருங்கள். ஈரானின் எல்லையை ஆக்கிரமிக்க எந்தவொரு போரையும் நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.

சவுதி எண்ணெய் நிலையங்கள் தாக்குதல்களின் ஆரம்ப விசாரணைகள் ஈரான் ஏதோ ஒரு வகையில் பொறுப்பேற்றுள்ளன என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. எனினும், ஈரான் அதை மறுக்கிறது.

இந்நிலையில், கவனமாக இருங்கள், கட்டுப்படுத்தப்பட்டு இருக்கும் கோபம் தொடர்ந்து கட்டுப்பாட்டில் இருக்காது. எந்தவொரு ஆக்கிரமிப்பாளரையும் முழுமையாக அழிக்கும் வரை நாங்கள் தொடருவோம் என்று சலாமி கூறினார்.

மேலும், அதன் வான்வெளியை மீறும் டிரோன்களை ஈரான் தொடர்ந்து வீழ்த்தும் என்று சலாமி கூறினார். ஜூன் மாதத்தில் ஹார்முஸ் ஜலசந்தியின் மீது சர்வதேச வான்வெளியில் பறந்த அமெரிக்க ராணுவ டிரோனை ஈரான் சுட்டு வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்