70,000 ஹீரோக்கள்.. 6 நாளில் மீண்டும் உருவான எண்ணெய் நிலையங்கள்: அழிக்க நினைத்தவர்களுக்கு சவுதி தக்க பதிலடி

Report Print Basu in மத்திய கிழக்கு நாடுகள்

டிரோன் தாக்குதல்கள் மூலம் தீக்கிரையான சவுதி எண்ணெய் நிலையங்கள் முன்னெப்போதையும் விட வலிமையாக மீண்டு வந்துள்ளதாக அரம்கோவின் தலைமை நிர்வாக அதிகாரி கூறியுள்ளார்.

சவுதி அரேபியாவின் 89 வது தேசிய தினத்தின் நிகழ்வின் போது பேசிய அரம்கோவின் தலைமை நிர்வாக அதிகாரி அமீன் நாசர், செப்டம்பர் 14 ம் திகதி அதன் எண்ணெய் நிலையங்கள் மீதான தாக்குதல்களில் இருந்து சவுதி அரம்கோ முன்னெப்போதையும் விட வலிமையானதாக மீண்டும் உருவாகியுள்ளது.

சவுதி அரம்கோவை அழிக்க நினைத்த நடத்தப்பட்ட தாக்குதல் எதிர்பாராத விளைவை ஏற்படுத்தியது. அவை விரைவாகவும் நம்பிக்கையுடனும் மீளக்கூடிய ஒரு பணியைச் செய்ய 70,000 பேரை ஊக்குவித்தன.

இந்த தாக்குதல்கள் சவுதி அரேபியா மற்றும் அதன் எண்ணெய் தொழிற்துறையின் முக்கியத்துவத்தை உலகுக்கு உறுதிப்படுத்தியது என்று நாசர் மேலும் கூறினார்.

சவுதி அரேபியாவின் உள்ளுர் பாதுகாப்புப் படைகளையும், தாக்குதல்களின் சேதங்களைக் கட்டுப்படுத்த உதவிய ஹீரோ ஊழியர்களையும் நாசர் பாராட்டினார்.

தேசிய அடையாளமாக திகழ எங்களுக்கு இன்னொரு காரணம் உள்ளது, நாசவேலை தாக்குதல்களிலிருந்து மீண்டு வர ஹீரோ ஊழியர்கள், உள்ளுர் பாதுகாப்பு குழுக்களுக்கு ஆதரவாக செயல்பட்டு மீண்டும் வலுவாக உருவானது மிகப்பெரிய சாதனை என்று நாசர் கூறினார்.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்