ஒப்புதல் அளித்துவிட்டார் டிரம்ப்.. சவுதியில் அமெரிக்க ராணுவப்படைகள் குவிப்பு: பீதியில் ஈரான்

Report Print Basu in மத்திய கிழக்கு நாடுகள்

சவுதி அரேபியாவில் உள்ள எண்ணெய் நிலையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஈரான் தான் காரணம் என குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

சவுதி அரேபியா தாக்குதல்களைத் தொடர்ந்து அமெரிக்க ராணுவப் படைகளை அந்நாட்டிற்கு அனுப்பு டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளதாக பென்டகன் தெரிவித்துள்ளது.

சவுதி எண்ணெய் நிலையங்கள் மீதான தாக்குதல்களுக்கு ஈரான் மீது அமெரிக்காவும் குற்றம் சாட்டியப் பின்னர், சவுதி அரேபியாவின் வான் பாதுகாப்பை அதிகரிக்க அமெரிக்க படைகளை அனுப்ப டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார் என்று பென்டகன் தெரிவித்துள்ளது.

பென்டகன் மிதமான எண்ணிக்கையிலான படைகளை அனுப்பும் என்றும் இது பிராதனமாக தற்காப்புடன் இருக்கும் என்றும் கூறினார்.

தாக்குதல்களைத் தொடர்ந்து சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவற்றின் வேண்டுகோளின் பேரில் அமெரிக்கா வளைகுடாவுக்கு படைகளை அனுப்புகிறது என்று பாதுகாப்பு செயலாளர் Mark Esper தெரிவித்தார்.

படைகளின் சரியான எண்ணிக்கை மற்றும் ஆயுதங்களின் வகை இன்னும் முடிவு செய்யப்படவில்லை, ஆனால் பிராந்தியத்திற்கு மிதமான அளவில் படைகள் அனுப்பப்படும் என்று கூட்டுப் படைத் தலைவர் Joe Dunford கூறினார்.

ஆனால், அமெரிக்காவின் இந்த நிலைப்பாடு ஈரானை மேலும் கோபமடைய வைக்கும், முன்னதாக இந்த ஆண்டு இதற்கு முன்பு அமெரிக்க படைகள் அனுப்பப்பட்டதை அடுத்து ஈரான் பயத்துடன் பதிலளித்துள்ளது. அதேசமயம் சவுதி அரேபியா மீதான தாக்குதலுக்கான பொறுப்பை ஈரான் மறுத்து வருகிறது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸை உள்ளடக்கிய சவுதி தலைமையிலான ராணுவ கூட்டப்படையுடன் போராடி வரும் ஏமனின் ஈரானுடன் இணைந்த ஹவுத்தி இயக்கம், சவுதி எண்ணெய் நிலைய தாக்குதலுக்கு பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்