சவுதி எண்ணெய் நிலையம் மீது நடந்த தாக்குதலுக்கு யார் காரணம்.. வெளிப்படையாக ஒப்புக்கொண்ட ஈரான் அமைச்சர்

Report Print Basu in மத்திய கிழக்கு நாடுகள்

சவுதி அரேபியா மீது நடந்த தாக்குதலுக்கு யார் காரணம் என்ற கோள்விக்கு ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் முகமத ஜவாத் ஜரிஃப் பதிலளித்துள்ளார்.

செப்டம்பர் 14ம் திகதி சனிக்கிழமை, இரண்டு சவுதி அரம்கோ எண்ணெய் நிலையங்கள் மீது நடந்த தாக்குதலுக்கு ஈரான் ஆதரவு ஹவுத்தி இயக்கம் காரணமா என்ற கேள்விக்கு பதிலளிக்க வெளியுறவு அமைச்சர் முகமது ஜவாத் ஜரிஃப் மறுத்துவிட்டார்.

ஒரு தொலைக்காட்சி நேர்காணலில், சி.என்.என் பத்திரிகையாளர் Nick Paton Walsh, ஹவுத்திகள் தாக்குதல்களை நடத்தினார்களா என்று மூன்று முறை ஜரிஃபிடம் கேட்டார். கேள்விக்கு பதிலளிக்க தடுமாறிய ஜரிஃப், இறுதிவரை நேரடியாக பதிலளிக்கவில்லை.

இந்த தாக்குதலுக்கு ஹவுத்திகள் தான் பொறுப்பு என்று ஈரான் மிகவும் உறுதியாக இருக்கிறதா என்று Walsh முதலில் ஜரிஃபிடம் கேட்டார். ஈரான் அந்த தாக்குதலை நடத்தவில்லை என்று எனக்கு நன்றாகத் தெரியும் என்று ஜரிஃப் பதிலளித்தார்.

மீண்டும் கேள்வியை முன்வைத் Walsh, இந்த தாக்குதலுக்கு ஹவுத்திகள் தான் காரணம் என்று நம்புவதாக ஜரிஃப் தொடர்ந்து கூறுவது எப்படி என்று கேட்டார்.

இதை மறுத்த ஜரிஃப், ஹவுத்திகள் அந்த தாக்குதலை தாங்கள் தான் நடத்தியதாக அறிக்கையை வெளியிட்டார்கள் என்று நான் நம்புகிறேன் என்று கூறினார்.

மேலும் ஒரு முறை முயன்ற Walsh, ஹவுத்திகள் இந்த தாக்குதலை நிகழ்த்தியதாக ஜரிஃப்-க்கு இப்போது உறுதியாக தெரியவில்லையா என்று கேட்டார்.

அவர்கள் அதைச் செய்தார்கள் என்பதில் எனக்கு எந்த நம்பிக்கையும் இல்லை, ஏனென்றால் நாங்கள் அவர்களின் அறிக்கையை பார்த்தோன். நாங்கள் அதை செய்யவில்லை என்று எனக்குத் தெரியும். ஹவுத்திகள் அதைச் செய்ததாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர் என்பதை நான் அறிவேன் என்று ஜரிஃப் கூறினார்.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்