5 வயது சிறுவனை வணிக வளாகத்தில் கைவிட்டு மாயமான தாயார்... 4 பெண்களுக்கு டி.என்.ஏ சோதனை: வெளியான பகீர் சம்பவம்

Report Print Arbin Arbin in மத்திய கிழக்கு நாடுகள்

ஐக்கிய அமீரகத்தின் துபாயில் வணிக வளாகம் ஒன்றில் இருந்து கடந்த 10 நாட்களுக்கு முன்னர் கைவிட்ட நிலையில் மீட்கப்பட்ட 5 வயது சிறுவன் தொடர்பில் பகீர் பின்னணி வெளியாகியுள்ளது.

துபாய் வணிக வளாகம் ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட 5 வயது சிறுவன் தொடர்பில் கடந்த 10 நாட்களாக எவரும் புகார் அளிக்காததை அடுத்து,

குறித்த சிறுவன் தொடர்பில் பொதுமக்களின் உதவியை துபாய் பொலிசார் நாடியிருந்தனர். இந்த நிலையில் சிறுவன் தொடர்பில் பகீர் தகவல்களை துபாய் பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

குறித்த சிறுவனுக்கு ஒரு வயதாக இருக்கும் போது, சிறுவனின் தாயார் துபாய் விட்டு வெளியேறி சொந்த நாட்டுக்கு சென்றதாகவும், அதன் பின்னர் அவர் துபாய் திரும்பவில்லை என பொலிசார் விசாரணையில் கண்டறிந்துள்ளனர்.

வெளிநாட்டவரான அந்த பெண்மணி துபாயில் இருந்து வெளியேறும்போது தமது பிள்ளையை அவரது நாட்டவரான பெண்மணி ஒருவரிடம் ஒப்படைத்து விட்டு மாயமாகியுள்ளார்.

தற்போது சிறுவனின் புகைப்படம் ஒன்றை வெளியிட்ட துபாய் பொலிசார் பொதுமக்களின் உதவியை நாடிய நிலையில்,

சுமார் ஒன்றரை மணி நேரத்தில் பொதுமக்களிடம் இருந்து தொலைபேசி மூலம் தகவல் கிடைத்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அதில் ஒருவர், சிறுவனை தமக்கு தெரியும் எனவும், பெண் ஒருவருடன் தாம் சிறுவனை பார்த்துள்ளதாகவும் அந்த நபர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து குறித்த பெண்மணியை கைது செய்த பொலிசார், மேற்கொண்ட விசாரணையில் சிறுவனின் தாயார் வெளிநாட்டுக்கு தப்பிய கதையை கூறியுள்ளார்.

மட்டுமின்றி சிறுவனின் தாயார் தொடர்பில் மேலதிக தகவல் ஏதும் தெரியாது எனவும், அவர் திரும்பி வருவார் என்ற எதிர்பார்ப்பில், கடந்த 5 ஆண்டுகளாக சிறுவனை பார்த்துக் கொண்டதாகவும்,

ஆனால் சிறுவனின் உணவுக்கும் கல்விக்கும் அதிக செலவான நிலையில், நண்பர்களின் உதவியை நாடியதாகவும் அவர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

நண்பர்கள் ஆலோசனையை அடுத்து அல் முத்தீனா பகுதியில் குடியிருக்கும் பெண் ஒருவரிடம் சிறுவனை ஒப்படைத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் அல் முத்தீனா பகுதி பெண்மணி சிறுவனை சிறிது காலம் தம்முடன் வைத்துக் கொண்டுள்ளார். பின்னர் குறித்த பெண்மணியே நண்பர்களின் ஆலோசனையின் பேரில் வணிக வளாகத்தில் விட்டு விட்டு மாயமாகியதாக விசாரணையில் தெரியவந்தது.

இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் நான்கு பெண்களை டி.என்.ஏ சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

ஆனால் இந்த நான்கு பெண்களும் சிறுவனின் தாயார் அல்ல என தெரியவந்துள்ளது. செப்டம்பர் மாதம் 7 ஆம் திகதி பிரபலமான வணிக வளாகம் ஒன்றில் இருந்து தனியாக தத்தளித்த சிறுவனை பிலிப்பைன்ஸ் நாட்டவர் ஒருவர் மீட்டு பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளார்.

சிறுவனிடம் மேற்கொண்ட விசாரணையில், தமது தந்தை ஒரு சூப்பர்மான் என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்