சவுதி எண்ணெய் நிலையங்களை அழிக்க உத்தரவிட்டவர்... அமெரிக்கா அதிகாரி முக்கிய தகவல்

Report Print Basu in மத்திய கிழக்கு நாடுகள்

உலகையே பதற வைத்த சவுதி அரேபியாவின் Aramco எண்ணெய் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்த நபர் குறித்து அமெரிக்க அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் சவுதியின் இரண்டு எண்ணெய் நிலையங்கள் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி, சவுதி Aramco-வின் எண்ணெய் நிலையங்களை குறிவைத்த தாக்குதல் நடத்த ஒப்புதல் அளித்தார் என அமெரிக்க அதிகாரியை மேற்கோள் காட்டி CBS செய்தி வெளியிட்டுள்ளது.

இத்தாக்குதலுக்கும் ஈரானுக்கும் எந்தவித தொடர்பும் இல்லாத படி நடத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன் சவுதி தாக்குதல்களுக்கு கமேனி ஒப்புதல் அளித்ததாக குறிப்பிட்டுள்ளது.

இந்த தாக்குதல்களுக்கு ஈரான் கிட்டத்தட்ட 12 கப்பல் ஏவுகணைகளையும், 20க்கும் மேற்பட்ட டிரோன்களையும் தனது பிரதேசத்திலிருந்து ஏவியது என்று டிரம்ப் நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஈரான் அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை மறுத்ததுடன், அது முழு அளவிலான போருக்கு தயாராக இருப்பதாகவும் கூறியது.

தெஹ்ரானை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டால் அது உடனடியாக பதிலடி கொடுக்கும் என்று ஈரான் அமெரிக்காவை எச்சரித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்