சவூதி தெருக்களில் அனைவரையும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்த இளம்பெண்!

Report Print Vijay Amburore in மத்திய கிழக்கு நாடுகள்

சவூதி தெருக்களில் மேற்கத்திய உடையில் சுற்றித்திரிந்த இளம்பெண் ஒருவர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

இஸ்லாமிய நாடுகளில் பெரும்பாலும் பெண்கள் கருப்பு நிறத்திலான அங்கிகளையே வெளியில் அணிந்து திரிவார்கள். அதனை பக்தியின் அடையாளமாகவும் பரவலாக கருதுகின்றனர்.

கடந்த ஆண்டு ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த இளவரசர் முகமது பின் சல்மான், இஸ்லாத்தில் அங்கி கட்டாயமில்லை என்றும், ஆடைக் குறியீடு தளர்த்தப்படலாம் என்றும் சுட்டிக்காட்டினார்.

ஆனால் அவரது தாராளமயமாக்கல் உந்துதல் இருந்தபோதிலும், முறையான கட்டளை எதுவும் பின்பற்றப்படாததால் இந்த நடைமுறை தொடர்ந்தது.

இதற்கு பின்னர் பெண்கள் சிலர் பொதுவெளிகளில் மேற்கத்திய ஆடைகளை அணிந்து அதன் புகைப்படங்களை தங்களுடைய சமூகவலைத்தள பக்கங்களில் வெளியிட்டு ஒரு அரிதான ஆர்பாட்டத்தை நடத்தினர்.

இதனால் பழமைவாதிகள் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவிக்கலாம் என்கிற கருத்து இருந்த போதிலும், பெண்கள் சிலர் பொதுவெளிகளில் அவ்வப்போது மேற்கத்திய ஆடைகளை அணிந்து வந்தனர்.

இந்த நிலையில் மஷேல் அல்-ஜலூத் என்கிற 33 வயதான மனிதவள நிபுணர், கலாச்சார கிளர்ச்சியை ஒரு படி மேலே கொண்டு சென்றுள்ளார். அங்கி அணிவதை நிறுத்திவிட்டு கடந்த வாரம் மத்திய ரியாத்தில் உள்ள ஒரு மாலில் மேற்கத்திய ஆடையுடன் உலா வந்துள்ளார்.

இதனை அங்கிருந்த பொதுமக்கள் அனைவருமே ஆச்சர்யத்துடன் முறைத்து பார்த்துள்ளனர். அதில் ஒரு பெண், நீங்கள் பிரபலமானவரா? மொடல் அழகியா? என கேள்விகளை அடுக்கியுள்ளார்.

ஆனால் ஜலூத் சிரித்துக்கொண்டே சாதாரண சவூதி பெண் எனக்கூறியுள்ளார்.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்