பிரித்தானியா பிடியில் ஈரான்..! வியாழக்கிழமை நடக்கப்போகும் சம்பவம்: கசிந்தது தகவல்

Report Print Basu in மத்திய கிழக்கு நாடுகள்

பிரித்தானியா ராயல் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட ஈரானிய எண்ணெய் டேங்கரை ஜிப்ரால்டர் அரசு வியாழக்கிழமை விடுவிக்கும் என The Sun newspaper செய்தி வெளியிட்டுள்ளது.

சிரியாவிற்கு எண்ணெய் எடுத்துச் செல்வதன் மூலம் ஐரோப்பிய ஒன்றிய பொருளாதாரத் தடைகளை மீறியதாக சந்தேகத்தின் பேரில் பிரித்தானியா கடற்படையினர் யூலை 4 ம் திகதி பிரித்தானியா மத்தியதரைக் கடல் பகுதியான ஜிப்ரால்டரின் கடல் பகுதியில் வைத்து ஈரானின் கிரேஷ் 1 டேங்கரைக் கைப்பற்றினர். ஆனால், குறித்த குற்றச்சாட்டை ஈரான் மறுத்தது

இந்நிலையில், பிரித்தானியாவால் கடந்த யூலை மாதம் கைப்பற்றப்பட்ட ஈரானின் கிரேஸ் 1 டேங்கர் செல்வாய்க்கிழமை விடுவிக்கப்படும் என ஜிப்ரால்டர் அதிகாரி ஒருவர் கூறியதாக மேற்கோளிட்டு ஈரான் செய்தி நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

ஆனால், ஈரானிய செய்தி நிறுவன அறிக்கையை, ஜிப்ரால்டேரிய அரசாங்கம் மறுத்தது. ஈரானிய எண்ணெய் டேங்கர் கிரேஸ் 1 தொடர்பான விசாரணைகள் ஜிப்ரால்டரின் விஷயம் என்று பிரித்தானியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில். கைப்பற்றப்பட்ட ஈரானிய எண்ணெய் டேங்கர் வியாழக்கிழமை விடுவிக்கப்படும் என்று ஜிப்ரால்டர் முதல்வர் ஃபேபியன் பிகார்டோவுக்கு நெருக்கமானவர்கள் கூறியதாக மேற்கோளிட்டு The Sun newspaper செய்தி வெளியிட்டுள்ளது.

எண்ணெய் டேங்கர் இனியும் சிரியாவிற்கு செல்லாது என்பதில் பிகார்டோ திருப்தி அடைந்தாகவும், தொடர்ந்து கிரேஸ் 1-ஐ தடுத்து வைக்கும் பிகார்டோ உத்தரவு பிறபிக்கவில்லை எனவ The Sun குறிப்பிட்டுள்ளது.

கிரேஸ் 1-ஐ ஜிப்ரால்டரில் ஒரு கணம் கூட வைத்திருக்க எந்த காரணமும் இல்லை, அது சிரிய ஆட்சிக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை மீறுவதாக நாங்கள் நம்பவில்லை என்று பிகார்டோவுக்கு நெருக்கமானவர் கூறியதாக மேற்கோள் காட்டி The Sun கூறியுள்ளது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்