பிரித்தானியா-ஈரான் மோதலுக்கு முற்றுப்புள்ளி..! முக்கிய அறிவிப்பு வெளியானது

Report Print Basu in மத்திய கிழக்கு நாடுகள்

பிரித்தானியா கைப்பற்றிய தனது எண்ணெய் டேங்கர் கப்பல் கிரேஸ் 1-ஐ விரைவில் விடுவிக்கக்கூடும் என்று ஈரான் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

கடந்த யூலை 4ம் திகதி ஜிப்ரால்டர் கடற்கரையில் சிரியாவிற்கு எண்ணெய் கடத்தியதாக சந்தேகிக்கப்படும் கிரேஸ் 1 என்ற ஈரானிய கப்பலை பிரித்தானியா கடற்படையினர் கைப்பற்றினர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹார்முஸ் ஜலசந்தியில் பிரித்தானியா எண்ணெய் டேங்கரை ஈரான் கைப்பற்றியது. இதைதொடர்ந்து, வளைகுடாவில் தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில். கைப்பற்றப்பட்ட கப்பலை விடுவிக்க உதவும் சில ஆவணங்கள் பரிமாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த யூலை 4ம் திகதி பறிமுதல் செய்த ஈரானின் கிரேஸ் 1 எண்ணெய் டேங்கரை விடுவிக்க பிரித்தானியா ஆர்வமாக உள்ளது.

விரைவில் கிரேஸ் 1 டேங்கரை பிரித்தானியாவால் விடுவிக்கப்படும் என்று நம்புவதாக என ஈரானின் துறைமுகங்கள் மற்றும் கடல்சார் அமைப்பின் துணைத் தலைவர் ஜலில் எஸ்லாமி தெரிவித்துள்ளார்.

ஈரானுக்கும், மேற்கு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் வளைகுடாவில் பயணிக்கும் வணிகக் கப்பல்களைப் பாதுகாப்பதற்காக, மேலும், எச்.எம்.எஸ் கென்ட் போர்கப்பல் வளைகுடாவிற்கு அனுப்பபடும் என பிரித்தானியா அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்