பிரித்தானியா போர்கப்பலுக்கு என்ன நேர்ந்தது..! ஈரான் வெளியிட்ட பரபரப்பு வீடியோ: மீண்டும் அதிகரிக்கும் பதற்றம்

Report Print Basu in மத்திய கிழக்கு நாடுகள்

பாரிசீக வளைகுடாவில் இருந்த பிரத்தானியா போர்கப்பலை ஈரானின் ஆயுதமேந்திய படகுகள் விரட்டியடித்த சம்பவம் இருநாடுகளுக்கு இடையேயான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

இதை உறுதிபடுத்தும் வகையில் ஈரானிய புரட்சிகர பாதுகாப்பு படை அதிகாரப்பூர்வமாக வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், பாரசீக வளைகுடாவில் அபு மூசா தீவின் தெற்கே பிரித்தானியாவிற்கு சொந்தமான உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த கப்பலாக கருதப்படும் எச்எம்எஸ் டங்கள் 45 ரக போர் கப்பல் நிற்கிறது, இதைக்கண்ட ஈரானின் ஆயுதமேந்திய சிறிய படகுகள் அதை விரட்டியடிக்கின்றனர்.

ஹார்முஸ் ஜலசந்தியில் பிரித்தானியாவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பதட்டங்களுக்கு இடையே கடந்த சில வாரங்களாக எச்.எம்.எஸ் டங்கன் அப்பகுதியில் இருந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

ஆனால், இதுகுறித்து பிரித்தானியா எம்.பி ஜேம்ஸ் ஹீப்பி கூறியதாவது, ஈரானின் படை தோல்வியடைந்து விட்டது. ஈரான் படை விரட்டி அடித்த கப்பல் பிரித்தானியாவின் சக்திவாய்ந்த எச்எச்எஸ் டங்கன் இல்லை என உறுதி செய்துள்ளார்.

சிரியாவிற்கு எண்ணெய் எடுத்துச் செல்வதன் மூலம் ஐரோப்பிய பொருளாதாரத் தடைகளை மீறுவதாக சந்தேகத்தின் பேரில் கிரேஸ் 1 என்ற ஈரானிய எண்ணெய் டேங்கரை கப்பலை பிரித்தானியா படைகள் கைபற்றியது முதல் இருநாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...