எருசலேம் மதில் அருகே காணப்பட்ட நரிகள்: முன்னோர் சொல் நிறைவேறுதலாம்!

Report Print Balamanuvelan in மத்திய கிழக்கு நாடுகள்

எருசலேமிலுள்ள மதில் சுவர் ஒன்றின் அருகில் நரிகள் நடமாடும் காட்சிகள் சில வெளியாகியுள்ள நிலையில், அது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

யூத ரபியான Shmuel Rabinowitz என்பவர், இது ஒரு தீர்க்கதரிசன நிறைவேறுதல் என்கிறார்.

தூய விவிலியத்தில் கூறப்பட்டுள்ள ஒரு வசனம், பாழாய்க்கிடக்கிற சீயோன் மலையின் மேல் நரிகள் ஓடித்திரிகிறது என்று கூறுகிறது.

அதன் முக்கியத்துவம் என்னவென்றால், எருசலேமில் கட்டப்பட்ட இரண்டு தேவாலயங்கள் இடித்து நாசமாக்கப்பட்டன.

முதல் தேவாலயம் பாபிலோன் மன்னர்களாலும், மீண்டும் கட்டப்பட்ட இரண்டாவது தேவாலயம், ரோமர்களாலும் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன.

தேவாலயம் இடிக்கப்படும், அங்கு நரிகள் நடமாடும் என உரியா என்னும் தீர்க்கதரிசி கூறிய தீர்க்கதரிசனமாக இது பார்க்கப்படுகிறது.

அப்படி அது தீர்க்கதரிசன நிறைவேறுதலாக இருக்கும் பட்சத்தில், அத்துடன் தொடர்புடைய மற்றொரு தீர்க்கதரிசனமும் நிறைவேறும் என்று நம்பப்படுகிறது.

எப்படி தேவாலயம் இடிக்கப்படும், நரிகள் அங்கு நடமாடும் என்று சொல்லப்பட்டுள்ளதோ, அதேபோல், மீண்டும் தேவாலயம் கட்டி எழுப்பப்படும் என்னும் சகரியா என்னும் தீர்க்கதரிசியின் தீர்க்கதரிசனமும் நிறைவேறும் என்ற நம்பிக்கையும் நிலவுகிறது.

மேற்கு சுவர் என்று அழைக்கப்படும் இந்த மதில் சுவர் இடிக்கப்பட்ட இரண்டாம் தேவாலயத்தில் மிஞ்சிய ஒரு பகுதியாகும். இப்பகுதி, யூதர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களால் முக்கியத்துவம் வாய்ந்த புனிதத்தலமாக கருதப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்