சுறாக்கள் போல் சுற்றி வளைத்த ஈரான்.. பிரித்தானியாவின் புதிய பிரதமருக்கு காத்திருக்கும் சவால்

Report Print Basu in மத்திய கிழக்கு நாடுகள்

பிரித்தானியாவின் புதிய பிரதமராக உறுதி செய்யப்பட்டுள்ள போரிஸ் ஜான்சனுக்கு, ஈரான் புதிய எச்சரிக்கை விடுத்துள்ளது.

கைப்பற்றப்பட்ட பிரித்தானியாவின் ஸ்டெனா இம்பீரோ கப்பலை சுற்றி சுறாக்களைப் போல பயங்கரமாக சுற்றி வரும் ஈரான் இராணுவ படகுகளின் அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள் வெளிவந்தன. கடந்த வாரம் கைப்பற்றப்பட்ட பிரித்தானியா கப்பல், இப்போது ஈரானிய துறைமுக நகரமான பந்தர் அப்பாஸிலில் இருக்கிறது.

ஐரோப்பிய படைகளை ஹார்முஸ் ஜலசந்திக்கு அனுப்புவதற்கான திட்டங்கள் குறித்து பிரித்தானியா வெளியுறவு செயலாளர் ஜெர்மி ஹன்ட் அறிவித்ததை அடுத்து, எங்கள் கடல்எல்லைக்கு உட்பட்ட பகுதியை பாதுகாப்போம் என்று பிரித்தானியாவிற்கு ஈரான் எச்சரித்துள்ளது.

பிரித்தானியாவின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள போரிஸ் ஜான்சனுக்கு வாழ்த்து தெரிவித்த ஈரானி வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது ஜவாத் ஸரீஃப், பிரிததானியர்களை கடல் கொள்ளையர்கள் என்று குற்றம் சாட்டினார் மற்றும் வளைகுடாவில் பாதுகாப்பு மற்றும் கடல்வழி சுதந்திரத்திற்கு ஈரான் தான் பொறுப்பு என்று வலியுறுத்தினார்.

புதிய பிரதமர் போரிஸ் ஜான்சன் எதிர்கொள்ளும் முதல் வெளியுறவு சவால்களில் ஒன்றாக இந்த பிரச்சினை இருக்கும். ஆனால், ஈரான் மோதலை விரும்பவில்லை என ஸரீஃப் கூறினார். ஆனால் எங்களிடம் 1,500 மைல் பாரசீக வளைகுடா கடற்கரை உள்ளது. இவை எங்கள் நீர்நிலைகள், அவற்றை நாங்கள் பாதுகாப்போம் என குறிப்பிட்டார்.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்