பிரித்தானியா கப்பல்கள் பறிமுதல்.. ஈரானுக்கு பின்னால் ரஷ்யா ஜனாதிபதி புதின்; கசிந்த திடுக் தகவல்

Report Print Basu in மத்திய கிழக்கு நாடுகள்

பிரித்தானியா டேங்கர் கப்பல்கள் பறிமுதல் செய்யப்பட்ட விடயத்தில் ஈரானுக்கு பின்னனியில் ரஷ்யா இருப்பதாக அஞ்சப்படுகிறது.

ரஷ்ய உளவாளி தொழில்நுட்பத்தால் அனுப்பப்பட்ட தவறான ஜி.பி.எஸ் ஒருங்கிணைப்புகளால் பிரித்தானியா எண்ணெய் டேங்கர், ஈரானை நோக்கி வழிநடத்தப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

ஈரானிய உளவுத்துறை, பிரித்தானியா கப்பலான ஸ்டெனா இம்பீரோவின் கேப்டனுக்கு தவறான சிக்னல்களை அனுப்பியதா என்று GCHQ மற்றும் MI6 விசாரித்து வருவதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதேசமயம், ஈரானிய ட்ரோன்கள் ஜி.பி.எஸ் சிக்னல்களை சேதப்படுத்தியிருக்கலாம் என்றும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. தொழில்நுட்ப தடம் இருக்கிறதா என்றும், மேலும் அப்பகுதியில் உள்ள மேற்கு உளவு விமானங்கள் சந்தேகத்திற்கிடமான சிக்னல்களை எடுத்தனவா என்றும் புலனாய்வாளர்கள் ஆராய்வார்கள் என கூறப்பட்டுள்ளது.

மேற்கத்திய பாதுகாப்பு வட்டாரம் கூறியதாவது, ஜி.பி.எஸ்ஸை ஏமாற்றுவதற்கான தொழில்நுட்பம் ரஷ்யாவிடம் உள்ளது, மேலும் ஈரானுக்கு இந்த முயற்சியில் அது உதவி இருந்திருக்கலாம். இது பிரித்தானியா கப்பல் போக்குவரத்திற்கு மிகவும் பாதிப்பு ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும், மேலும் இப்பகுதியில் உள்ள ராயல் கடற்படை போர்க்கப்பல்களுக்கு மிகுந்த கவலையாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

சிரியாவில் அவர்களின் நலன்களைப் பாதுகாக்க ஈரான் மற்றும் ரஷ்ய மிக நெருக்கமாக பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers