நடுவானில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விமானங்கள்: பயணித்தவர்களின் நிலை என்ன?

Report Print Basu in மத்திய கிழக்கு நாடுகள்
188Shares

மத்திய கிழக்கு நாடான கத்தாரில் இரண்டு விமானங்கள் நடுவானில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.

இச்செய்தியை கத்தார் பாதுகாப்பு அமைச்சகம் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில், பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, இரண்டு கத்தார் இராணுவ பயிற்சி விமானங்கள், நடுவானில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவித்துள்ளது.

எனினும், விமானங்கள் மோதுவதற்கு முன், இரண்டு விமானத்தில் இருந்த விமானிகளும் விமானத்திலிருந்து பத்திரமாக, பாதுகாப்பாக வெளியேறியதாக கத்தார் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆனால், இந்த விபத்து எங்கு, எப்போது ஏற்பட்டது என்ற தகவலை பாதுகாப்பு அமைச்சகம் வெளியிடவில்லை.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்