வெளிநாட்டில் இந்திய பெண்ணுக்கு அடித்த மிகபெரிய அதிர்ஷ்டம்... எத்தனை கோடிகள் தெரியுமா?

Report Print Raju Raju in மத்திய கிழக்கு நாடுகள்
157Shares

துபாயில் வசிக்கும் ஒரு பெண் உள்பட இரண்டு இந்தியர்களுக்கு லொட்டரியில் தலா $1 மில்லியன் பரிசு விழுந்துள்ளது.

இந்தியாவை சேர்ந்த ஜெயா குப்தா மற்றும் ரவி ராம்சந்த் பச்சாணி ஆகிய இருவரும் தான் லொட்டரி மூலம் கோடீஸ்வரர்கள் ஆகியுள்ள அதிர்ஷ்டசாலிகள் ஆவார்கள்.

இதே போல இன்னொரு இந்தியருக்கு மெர்சிடீஸ் பென்ஸ் கார் பரிசாக கிடைத்துள்ளது.

ஜெயா குப்தா கூறுகையில், இந்த வெற்றியை தனது தாய்க்கும், கடவுளுக்கும் சமர்பிக்கிறேன்.

நான் துபாயில் கடந்த 35 ஆண்டுகளாக வசித்து வருகிறேன், 15 ஆண்டுகளாக லொட்டரி டிக்கெட்கள் வாங்கும் பழக்கம் உள்ளது.

மும்பையில் உள்ள எனது தாயை காண விமானம் ஏறும் போது இந்த லொட்டரி டிக்கெட்டை வாங்கினேன்.

லொட்டரி டிக்கெட் நம்பரை நான் ஒவ்வொரு முறையும் எடுக்கும் போது இதுவரை பரிசு விழுந்ததேயில்லை.

சரியென, டிக்கெட் விற்ற பெண்ணிடம், எனக்கு அதிர்ஷ்டமில்லை, நீயே நல்ல நம்பராக எடுத்து கொடு என்றேன்.

அந்த பெண் எடுத்து கொடுத்த லொட்டரிக்கு தான் பரிசு விழுந்துள்ளது. பரிசு பணத்தை வைத்து என்ன செய்வது என முடிவு செய்யவில்லை.

முதலில் சில கடன்களை அடைப்பேன், பின்னர் என் தொழிலில் பணத்தை முதலீடு செய்வதோடு ஒரு பகுதியை தொண்டு விடயத்துக்கு செலவிடுவேன்.

இதோடு இந்தியாவில் வசிக்கும் எனது இரண்டு வளர்ப்பு மகள்களுக்கு வீடு வேண்டும் என விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.

இன்னொரு வெற்றியாளரான ரவி கூறுகையில், நான் 14 ஆண்டுகளாக துபாயில் வசிக்கிறேன், தற்போது நான் கோடீஸ்வரனாக ஆகிவிட்டதை நம்பமுடியவில்லை என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்