அமெரிக்காவை அவமானப்படுத்திய ஈரான்.. அதிகரிக்கும் போர் பதற்றம்

Report Print Basu in மத்திய கிழக்கு நாடுகள்

ஈரான் உச்ச தலைவர் அலி கமேனி மீதான அமெரிக்காவின் புதிய பொருளாதாரத் தடைகளை ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானி தள்ளுபடி செய்துள்ளார்.

இதுகுறித்து ஈரான் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த அந்நாட்டு ஜனாதிபதி ஹசன் ரூஹானி கூறியதாவது, ஈரான் உச்ச தலைவர் அலி கமேனி மீது அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடை விதித்ததின் மூலம் வெள்ளை மாளிகையின் மனநலம் குன்றிவிட்டது என அவமானப்படுத்தியுள்ளார்.

கடந்த காலத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மனநலம் குன்றியவர் என ஈரான் அவமானப்படுத்தியது நினைவுக் கூரதக்கது.

அமெரிக்காவின் புதிய தடை வீண், ஏனெனில், அலி கமேனிக்கு வெளிநாட்டில் எந்த சொத்தும் இல்லை. அமெரிக்க விரக்தியின் அடையாளமே சமீபத்திய தடைகள். ஈரான் பொறுமை காப்பதால் எங்களுக்கு பயம் என்று அர்த்தமல்ல.

சமீபத்திய தடை மூலம் அமெரிக்க பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது பொய் என வெட்ட வெளிச்சமாக நிரூபணமாகியுள்ளது என ஈரான் ஜனாதிபதி ஹசன் ரூஹானி குறிப்பிட்டுள்ளார். இரு நாடுகளிடையே நாளுக்கு நான் மோதல் அதிகரித்து வருவதால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers