குவியும் அமெரிக்கா படைகள்.. போர் தொடுக்க ஈரான் தயாரா? ஜனாதிபதி அறிவிப்பு

Report Print Basu in மத்திய கிழக்கு நாடுகள்

போர் தொடுப்பது தொடர்பில் ஈரானின் நிலைப்பாடு குறித்து அந்நாட்டு ஜனாதிபதி ஹாசன் ரெளஹனி அறிவித்துள்ளார்.

ஓமன் வளைகுடாவில் இரண்டு எண்ணெய் கப்பல்கள் தாக்கப்பட்டதை அடுத்து, அமெரிக்காவினர் ஈரான் மீது தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். இதனையடுத்து, இரண்டு நாடுகளுக்கு இடையே போர் உருவாகும் சூழல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில், பாதுகாப்பு காரணம் கருதி மத்திய கிழக்கு பகுதிக்கு கூடுதலாக 1000 படைகள் முடிக்கிவிட்டுள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பேட்ரிக் ஷனஹான் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஈரான் ஜனாதிபதி ஹாசன் ரௌஹனி உள்ளுர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, ஈரான் எந்தவொரு நாட்டிற்கும் எதிராக போர் தொடுக்காது. எங்களை எதிர்கொள்பவர்கள் சிறிய அனுபவமுள்ள அரசியல்வாதிகளின் குழு.

பிராந்தியத்தில் அமெரிக்கா எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் காரணம், உலகம் முழுவதுமான எங்கள் உறவுகளை துண்டிக்க வேண்டும் என்ற அவர்களின் ஆசையும், ஈரானை ஒதுக்கி வைக்க வேண்டும் என்ற விருப்பமும் தான். இருந்தபோதிலும் அவர்கள் அதில் தோல்வியே அடைந்துள்ளனர் என ஈரான் ஜனாதிபதி ஹாசன் ரௌஹனி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்