அமெரிக்கா உடனான போர் பதற்றம்... உலக நாடுகளுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்தது ஈரான்

Report Print Basu in மத்திய கிழக்கு நாடுகள்

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்துள்ள பொருளாதார போரை, முன்னெடுப்பவர்களும், ஆதரவு அளிப்பவர்களும் தொடர்ந்து பாதுகாப்பாக இருப்போம் என்று எதிர்பார்க்க முடியாது என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜேர்மனி வெளியுறவுத்துறை அமைச்சர் ஹீக்கோ மாஸ் ஈரானுக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஜேர்மனி-ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் ஊடகவியலாளர் சந்திப்பில் ஈடுபட்டனர்.

அப்போது பேசிய ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் முகம்மது ஜவாத் ஜரிஃப் கூறியதாவது. ஈரான் மீது அமெரிக்கா கொண்டு வந்துள்ள பொருளாதார போரை முன்னெடுப்பவர்களும், அதற்கு ஆதரவு அளிப்பவர்களும் தொடர்ந்து பாதுகாப்பாக இருப்போம் என்று எதிர்பார்க்க முடியாது.

நிலவும் பதற்றத்தை குறைக்க ஒரே வழி பொருளாதார பேரை நிறுத்த வேண்டும். ஜேர்மனியும் ஐரோப்பிய ஒன்றியமும் நிலைமையை சீர்செய்ய ஒரு முக்கிய பங்கை கொண்டிருக்கக்கூடும் என்று முகம்மது ஜவாத் ஜரிஃப் குறிப்பிட்டார்.

ஜேர்மனி வெளியுறவுத் துறை அமைச்சர் கூறியதாவது, பதட்டங்களை குறைக்க தங்களால் முடிந்ததை ஜேர்மனி செய்யும். சிரியா, யேமனில் போர் நடக்கிறது. அதிர்ஷ்டவசமாக இங்கே இல்லை. போரிலிருந்து ஈரானை தவிர்க்க நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய விரும்புகிறோம் என தெரிவித்துள்ளார்.

தெஹிரானில் நடைபெற்ற சந்திப்பின் போது இருவரும் அணுசக்தி உடன்படிக்கை மற்றும் பிராந்திய பிரச்சினைகள், எதிர்காலத்தைப் பற்றி விவாதித்தனர். ஆனால், அவர்களது செய்தியாளர் சந்திப்பு பதட்டமானதாக இருந்தபோதிலும், அவை சிறியதாக உடன்பட்டதாக தோன்றியது.

ஈரானின் ஜனாதிபதி ஹசன் ருஹானியையும், ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் மாஸ் சந்தித்துள்ளார். இதுகுறித்து ஈரான் ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்ட அறிக்கையின்படி, ஒப்பந்தத்தை பாதுகாப்பதற்காக உறுதியான மற்றும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள ஐரோப்பியர்களுக்கு ஈரான் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers