கடைசியாக பதிவு செய்த இன்ஸ்டாகிராம் தகவல் உண்மையானது: துபாய் பேருந்து விபத்தில் கொல்லப்பட்ட இளம்பெண்

Report Print Arbin Arbin in மத்திய கிழக்கு நாடுகள்

துபாய் பேருந்து விபத்தில் கொல்லப்பட்ட இளம்பெண் பதிவு செய்த கடைசி இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது உண்மையானதாக அவரது நண்பர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஐக்கிய அமீரகத்தின் துபாயில் ஒரு 5 நட்சத்திர ஹொட்டலில் பணியாற்றி வந்தவர் ரோஷினி. இந்தியரான இவர் ஓமான் நாட்டில் நண்பர்களுடன் ரம்ஜான் விடுமுறையை கழித்துவிட்டு பேருந்தில் திரும்பியுள்ளார்.

ஓமானில் இருந்து திரும்பும் முன்னர் ரோஷினி தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், வீட்டுக்கு திரும்ப நேரமாகிவிட்டது என பதிவிட்டு ஒரு புகைப்படத்தையும் அதில் இணைத்துள்ளார்.

இந்த நிலையிலேயே ரோஷினி அந்த பேருந்து விபத்தில் சிக்கி கொல்லப்பட்டுள்ளார். துபாயில் உள்ள ஜபல் அலி பகுதியில் அவருக்கு இறுதி அஞ்சலி சடங்குகள் நடத்தப்பட்டுள்ளது.

ஓமான் அரசின் பயணிகள் சொகுசு பேருந்து, ராஷீதியா மெட்ரோ நிலைய பெயர் பலகையில் மோதி விபத்தில் சிக்கியுள்ளது.

ரம்ஜான் விடுமுறையை முன்னிட்டு ஓமான் தலைநகரான மஸ்கட்டில் சென்று திரும்பி வந்தவர்களே விபத்தில் சிக்கியவர்கள்.

விபத்தில் சிக்கிய 17 பேரில் 12 பேரும் இந்தியர்களாவர். இதில் 8 பேர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள்.

ரோஷினியின் அந்த இன்ஸ்டாகிராம் பதிவு, அவர் துபாய்க்கு திரும்புவதை இவ்வாறு குறிப்பிட்டிருக்கலாம் என அவரது நண்பர்கள் தெரிவித்துலனர்.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers