கொழும்பு குண்டுவெடிப்பில் சவுதியை சேர்ந்த இரண்டு பேர் பலி: இரங்கல் தெரிவித்த நிறுவனம்

Report Print Deepthi Deepthi in மத்திய கிழக்கு நாடுகள்

கொழும்பில் நடந்த குண்டுவெடிப்பில் சவுதியை சேர்ந்த அரேபிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் இரண்டு விமான ஊழியர்கள் இறந்துள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Ahmed Zain Jaafari மற்றும் Hani Maged Othman ஆகிய இருவரும் உயிரிழந்ததையடுத்து இரங்கல் தெரிவித்து அறிக்கை ஒன்றை விமான நிறுவனம் வெளியிட்டுள்ளது.

சவுதி அரேபியா ஏர்லைன்ஸ் குழுமத்தில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் எங்கள் அங்கத்தவர் இருவரின் உயிரிழப்பால் மிகுந்த துயரத்தில் இருக்கிறோம்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்காக இறைவனை பிரார்த்திக்கிறோம் என தெரிவித்துள்ளது.

இலங்கை குண்டுவெடிப்பில் 359 பேர் உயிரிழந்துள்ளனர், 500 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers