வெளிநாட்டில் நூற்றுக்கும் அதிகமான முறை லாட்டரி சீட்டு வாங்கிய இந்தியர்... இறுதியாக அடித்த பெரிய அதிர்ஷ்டம்

Report Print Raju Raju in மத்திய கிழக்கு நாடுகள்

அபுதாபியில் வசிக்கும் இந்தியர் கடந்த 18 ஆண்டுகளில் நூற்றுக்கும் அதிகமான முறை லாட்டரி சீட்டு வாங்கிய நிலையில் அவருக்கு தற்போது கோடிக்கணக்கில் பரிசு விழுந்துள்ளது.

இந்தியாவை சேர்ந்தவர் ரவீந்திரா பலூர். இவர் கடந்த 30 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் அபுதாபியில் ரவீந்திரா வாங்கிய லாட்டரி சீட்டுக்கு Dh10 மில்லியன் பரிசு விழுந்துள்ளது.

தற்போது ரவீந்திரா மும்பையில் உள்ள நிலையில் வரும் 27ஆம் திகதி அபுதாபிக்கு திரும்பவுள்ளார்.

ரவீந்தருக்கு பம்பர் பரிசு விழுந்தது குறித்து லாட்டரி நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில், ரவீந்தருக்கு வாழ்த்துக்கள், அவர் கடந்த 18 ஆண்டுகளாக நூற்றுக்கும் அதிகமான முறை லாட்டரி விளையாட்டில் பங்கேற்று வந்துள்ளார் என கூறப்பட்டுள்ளது.

லாட்டரி வெற்றியாளர் ரவீந்தர் கூறுகையில், பரிசு விழுந்த செய்தியை என்னுடைய நண்பர்கள் என்னை தொடர்பு கொண்டு கூறியபோது நான் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தேன்.

பரிசு விழுந்த தினம் என்னுடைய பிறந்தநாள் என்பதால் இதை பெரிய ஆசியாக கருதுகிறேன் என கூறியுள்ளார்.


மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்