வெளிநாட்டில் உணவு, வேலை இல்லாமல் தவித்த தமிழர்கள்.... இறுதியில் நடந்தது என்ன?

Report Print Raju Raju in மத்திய கிழக்கு நாடுகள்

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில் உணவு, தங்க இருப்பிடம் இல்லாமல் தவித்து வந்த 36 தமிழர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரையும் மக்கள் பாதை என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் மீட்டுள்ளனர்.

இது குறித்து அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் கூறுகையில், துபாயின் பர்துபாய் பகுதியில் தமிழர்கள் உணவு, தங்க இடம் மற்றும் வேலை இல்லாமல் சிரமப்படுகிறார்கள் என்பதை அறிந்தோம்.

அங்கு 11 தமிழர்களை கண்டுப்பிடித்த நிலையில் தோரா, சத்வா உள்ளிட்ட பகுதிகளில் வாழ்வாதாரத்துக்கு ஏங்கி கொண்டிருந்த மொத்தம் 36 பேரை கண்டுப்பிடித்தோம்.

அவர்களில் 10 பேருக்கு அங்கு வேலை மற்றும் உணவுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் 4 நபர்களைத் திரும்ப அதே நிறுவனங்களில் வேலைக்கு சேர்ந்துள்ளனர்.

மற்றவர்கள், தாயகம் செல்வதாகக் கூறிய நிலையில் அவர்களின் விருப்பப்படி தாயகம் திரும்பவுள்ளனர். இவர்களில் பலருக்கு வேலை தரப்படாததோடு ஊதியமும் ஒழுங்காக தரப்படவில்லை

படிக்காதவர்கள் சொந்த ஊரில் விவசாயம் அல்லது வேறு ஏதாவது பணி செய்து கெளரவமாக வாழ்வதே சிறந்தது.

அதை விட்டு இங்குள்ள போலி நிறுவனங்களில் சிக்க வேண்டாம் என கூறியுள்ளனர்.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers