நியூசிலாந்து சம்பவத்திற்கு ஆதரவு தெரிவித்த நபரை நாட்டை விட்டு வெளியேற்றிய துபாய் அரசு

Report Print Deepthi Deepthi in மத்திய கிழக்கு நாடுகள்

நியூசிலாந்து துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து ஆதரவாக கருத்து தெரிவித்த நபரை நாட்டை விட்டு துபாய் அரசு வெளியேற்றியுள்ளது.

கடந்த 15 ஆம் திகதி கிரைஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தில் 50 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான அவுஸ்திரேலியாவை பிறப்பிடமாக கொண்ட Brenton Tarrant என்பரை நியூசிலாந்து பொலிசார் கைது செய்துள்ளனர்.

உலக மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனங்கள் எழுந்தது. இந்நிலையில் துபாயில் பணியாற்றி வந்த நபர் ஒருவர் இதற்கு ஆதரவாக கருத்து தெரிவித்த காரணத்தால், அவர் வேலை பார்க்கும் Transguard நிறுவனத்தில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும், அவர் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆனால், அவரது பெயர் மற்றும் எந்த நாட்டைச் சேர்ந்தவர் போன்ற விவரங்களை வெளியிட அரசு மறுத்துவிட்டது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...