சவுதி அரசவையில் முதல் முறையாக

Report Print Deepthi Deepthi in மத்திய கிழக்கு நாடுகள்

அமெரிக்காவுக்காவுக்கான தூதரக அதிகாரியாக இளவரசி ரீமா பாண்ட் அல் சவுத் முதல் முறையாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சவுதி அரசவையில் தூதர் பதவியில் பொறுப்பேற்றுள்ள முதல் பெண் இவர் ஆவார்.

ரீமாவின் தந்தை பண்டார் அல் சுல்தான் சவுத் அமெரிக்க தூதர் பொறுப்பில் 1983ஆம் ஆண்டிலிருந்து 2005 வரை இருந்தார்.

அவரின் பதவி காரணமாக ரீமா தனது குழந்தை பருவத்தை அமெரிக்காவில் கழிக்க நேர்ந்தது. ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் அருங்காட்சிய படிப்புகளுக்கான பட்டம் பெற்றுள்ளார்.

தற்போது இந்த பதவியில் இளவரசரின் தம்பி காலித் பின் சல்மான் இருந்து வருகிறார். தற்போது அவர், நாட்டின் துணை பாதுகாப்புத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதையடுத்து இளவரசிக்கு ரீமாவுக்கு இந்த பதவி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்