வெளிநாட்டுக்கு சென்ற இந்திய தம்பதி பரிதாப மரணம்! உயிருக்கு போராடும் உறவுகள்

Report Print Fathima Fathima in மத்திய கிழக்கு நாடுகள்

ஷார்ஜாவில் தங்களது குடும்பத்தினரை காணச் சென்ற இந்திய தம்பதியினர் விபத்தில் சிக்கி பலியான சோக சம்பவம் நடந்துள்ளது.

இந்தியாவின் குஜராத் பரோடா பகுதியை சேர்ந்தவர்கள் வினோத்பாய் படேல், ரோகிணி பேகன்.

இவர்களுடன் சார்மி, மானவ், யோகேஷ், மேக்னா, தீபக் படேல், வைஷாலி ஆகியோர் விடுமுறையை கொண்டாடுவதற்காக ஷார்ஜா வந்திருந்தனர்.

இவர்கள் அனைவரும் கடந்த 12ம் திகதி காரில் பயணம் செய்த போது, தீபக் படேல் காரை ஓட்டியுள்ளார்.

பாலைவன பகுதியில் காரின் வேகத்தை அதிகப்படுத்த கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்தில் சிக்கியது.

இதில் ரோகிணிபேகன் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, மற்றவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், வினோத்பாய்க்கு மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தங்களது குடும்பத்தினரை காண 12 ஆண்டுகளுக்கு பின்னர் ஷார்ஜா வந்தவர்கள் விபத்தில் சிக்கிய சம்பவம் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers