மனைவியின் அந்தரங்க புகைப்படத்தை சகோதர்களுக்கு அனுப்பிய கொடூர கணவன்: அதிர்ச்சியில் குடும்பம்

Report Print Arbin Arbin in மத்திய கிழக்கு நாடுகள்

ஐக்கிய அமீரகத்தில் தனது மனைவியின் நிர்வாண புகைப்படங்களை பகிர்ந்த கணவருக்கு 250,000 திர்ஹம் அபரத்துடன் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

அபுதாபியில் வசிக்கும் தம்பதியினரின் கணவர், தனது மனைவியின் நிர்வாண புகைப்படங்களை அவரின் சகோதரன் மற்றும் அவரின் குடும்பத்தாருடன் பேஸ்புக் மூலம் பகிர்ந்துள்ளார்.

கணவரின் ஸ்மார்ட்போனை எதேச்சையாக பயன்படுத்தும் பொழுது அவரின் சொந்த நிர்வாண புகைப்படங்களை கண்டு அதிர்ந்து போயுள்ளார்.

உடனே தனது கணவரின் மொபைல் போனை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, அவரின் புகைப்படங்கள் குடும்பத்தாருடன் பகிரப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து தன் கணவரின் அநாகரீக செயலை கண்டித்து அப்பெண் வழக்கு தொடர்ந்துள்ளார்.

நீதிமன்றத்தில் அப்படி எவ்வித செயலையும் தான் செய்யவில்லை என்று அப்பெண்ணின் கணவர் தெரிவித்துவிட்டார்.

கணவரின் கருத்தை கேட்டபின் அவரின் மொபைல் போனை டிஜிட்டல் ஃபோரென்சிக் சோதனைக்கு அனுப்பும் படி நீதிபதி உத்தரவிட்டார்.

இதில் மனைவியின் நிர்வாண புகைப்படங்களை பேஸ்புக் மூலம் அவர் பகிர்ந்துள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் செய்த அநாகரீக செயலிற்கு 250,000 திர்ஹம் அபராதம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers