தாயாரின் முன்னிலையில் தலை துண்டிக்கப்பட்ட சிறுவனின் புகைப்படம் வெளியானது

Report Print Arbin Arbin in மத்திய கிழக்கு நாடுகள்

சவுதி அரேபியாவில் சன்னி பிரிவினருக்கான தொழுகை கூடத்தில் சென்றதாக கூறி கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்ட 6 வயது சிறுவனின் புகைப்படம் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஷியா பிரிவை சேர்ந்த ஜகரியா அல் ஜாபர் என்ற 6 வயது சிறுவன் தமது தாயாருடன் மெதினாவில் உள்ள நபிகள் நாயகம் தொழுகை கூடத்தில் சென்றுள்ளார்.

இது சன்னி பிரிவினருக்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தொழுகை முடித்து மகனுடன் காரில் சென்ற தாயாரிடம் அந்த ஓட்டுனர் ஷியா பிரிவினரா என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆம் என பதிலளித்த அடுத்த நொடியில் காரை நிறுத்தி அந்த தாயாரிடம் இருந்து சிறுவன் ஜகரியாவை பறித்து வெளியேற்றிய அந்த ஓட்டுனர், அப்பகுதியில் கிடந்த போத்தல் ஒன்றை உடைத்து, அதில் இருந்து கூரான கண்ணாடியால் அங்கேயே சிறுவனின் கழுத்தை அறுத்து கொன்றுள்ளார்.

இச்சம்பவத்தை நேரிடையாக பார்க்க நேர்ந்த ஜாகரியாவின் தாயார் சுயநினைவை இழந்து சரிந்துள்ளார்.

படுகொலை செய்யப்பட்ட ஜகரியாவின் புகைப்படங்கள் வெளியாகி தற்போது சவுதி அரேபியாவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைதளத்தில் ஜகரியாவுக்கு நீதி வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பில் இதுவரை எந்த நிர்வாகமும் தலையிடவில்லை என்பது மட்டுமல்ல எவரும் பொறுப்பேற்கவும் இல்லை.

சவுதி அரேபியாவில் உள்ள ஷியா சமூகத்தினர் சிறுவனின் இழப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ளதுடன், தங்களின் ஆதரவையும் தெரிவித்துள்ளனர்.

சவுதியில் உள்ள ஷியா சமூகத்தினருக்கு அரசாங்கத்தால் கடும் நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.

பலர் சிறையிலும் மரண தண்டனை எதிர்நோக்கியும் காத்திருக்கின்றனர். சவுதி மக்கள் தொகையில் நான்கில் மூன்று பகுதியினர் சன்னி சமூகத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers