சவுதி அரேபியாவில் 4 தமிழர்களுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை! சோக சம்பவம்

Report Print Kabilan in மத்திய கிழக்கு நாடுகள்

சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வந்த தமிழர்கள் நான்கு பேர் கார் விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களான அஜித்(26), வேல்முருகன்(50), லாரன்ஸ்(48), வில்சன்(49) ஆகிய நான்கு பேரும் சவுதியில் கட்டிடத் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர்.

இவர்கள் நால்வரும் குமரியில் வெவ்வேறு ஊர்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், சவுதியில் உள்ள தமாம் நகரில் ஒன்றாக வேலை செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த 27ஆம் திகதி ஒரே காரில் 4 பேரும் வேலைக்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது கோக்பர் எனும் இடத்தில் கார் எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

அதனைத் தொடர்ந்து, இந்த விபத்து குறித்து நேற்று முன்தினம் அவர்களது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தொழிலாளர்கள் 4 பேரின் உடல்களையும் சொந்த ஊருக்கு கொண்டு வர சவுதியில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers