வெளிநாட்டில் கணவன்: உள்ளூரில் தனியாக இருந்த மனைவிக்கு நேர்ந்த பயங்கரம்

Report Print Deepthi Deepthi in மத்திய கிழக்கு நாடுகள்

திண்டுக்கல் மாவட்டத்தில் வீட்டில் தனியாக இருந்த கலைச்செல்வி என்ற பெண் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

பர்மாகாலனியை சேர்ந்த பிரபாகரன் என்பவர் துபாயில் வேலை செய்கிறார். இவரது மனைவி கலைச்செல்வி 35. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.

நேற்று மதியம் வீட்டில் தனியாக இருந்த கலைச்செல்வியை கழதை அறுத்து கொலை செய்துள்ளனர்,

மதிய வேளையில் கலைச்செல்வியின் அலைபேசிக்கு கணவர் பிரபாகரன் தொடர்பு கொண்டார். அவர் அழைப்பை ஏற்கவில்லை. மீண்டும் மீண்டும் முயற்சித்தும் பலனில்லை.

இதனால் வேலைக்கார பெண்ணுக்கு தகவல் தெரிவித்தார். அப்பெண் வீட்டுக்கு சென்றபோது கதவு உள்பக்கம் பூட்டப்பட்டு இருந்தது.

ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தபோது கலைச்செல்வி கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது.

சொத்துக்காகவே இக்கொலை நடந்திருக்க அதிக வாய்ப்புள்ளது. வீட்டில் பொருத்தியிருந்த கண்காணிப்பு கமெராவின் காட்சிகளை பதிவு செய்யும் கருவியை எடுத்துச் சென்றதால், கொலையாளிகளை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

விரைவில் கைது செய்வோம் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers