எங்களை காப்பாற்றுங்கள்.... வெளிநாட்டில் கண்ணீர் விட்டு கதறும் தமிழ் பெண்களின் வீடியோ வெளியாகி பரபரப்பு

Report Print Deepthi Deepthi in மத்திய கிழக்கு நாடுகள்

சவுதி அரேபியாவிற்கு வீட்டு வேலைக்கு சென்று கொத்தடிமைகளாக சிக்கி தவிக்கும் தமிழ் பெண்கள் தங்களை மீட்குமாறு கண்ணீர் மல்க வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.

அப்பெண்கள் கண்ணீருடன் கதறும் வீடியோ பதிவு சமூகவலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாங்கள் அனைவரும் ஆண்டுக்கணக்கில் ஊதியம் இல்லாமல் கொத்தடிமைகளாக வேலை செய்து வருகிறோம், அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்டு ஊதியமும் கொடுக்கப்படாமல் குடும்பத்தினரை பிரிந்து சவுதியில் தவிக்கும் எங்களை காப்பாற்றுங்கள் என கெஞ்சுகின்றனர்.

இளம்பெண் முதல் 64 வயது மூதாட்டி வரை கொத்தடிமைகளாக உள்ள தமிழ் பெண்களை மீட்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

மேலும் அவர்களின் ஊதியத்தை பெற்று தரவும் மத்திய அரசு சவுதி அரசு மூலம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers