சவுதியில் புதிய நடைமுறை

Report Print Deepthi Deepthi in மத்திய கிழக்கு நாடுகள்

சவுதியில் மனைவியிடம் கூறாமலேயே விவாகரத்து பெறும் ஆண்களின் ரகசிய விவாகரத்துகளை தடுக்கும் வகையில் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தங்களது விவாகரத்து தகவல்களை அறிந்துகொள்ள முடியாத நிலையில் சவுதி பெண்கள் உள்ளனர்.

இதனை தடுக்கும் வகையில், விவாகரத்து வழக்கின் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது குறித்த தகவலை குறுஞ்செய்தியாக பெண்களுக்கு நீதிமன்றங்கள் அனுப்பி வைக்கிறது.

இந்த புதிய நடைமுறை விவாகரத்து ஆகும்போது, பெண்கள் தங்களுக்கான உரிமையை (ஜீவனாம்சம்) பெறுவதை உறுதிசெய்யும்.

மேலும், அவர்களின் விவாகரத்து தவறாக பயன்படுத்தப்படுவதற்கு முன்பு, அவர்களுக்கு தேவையான எந்த விதமான அங்கீகாரமும், அவர்கள் பெறுவதை இது உறுதிசெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers