பாலியல் விவகாரத்தில் வெளிநாட்டிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட தமிழர்

Report Print Deepthi Deepthi in மத்திய கிழக்கு நாடுகள்

மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அபுதாபிக்கு தப்பியோடிய இளைஞர் தூதரக உதவியுடன் அந்நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளார்.

கதிரவன் என்ற 24 வயது வாலிபர், 2017-ம் ஆண்டு வேப்பூர் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இது குறித்து விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் கதிரவன் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில், கதிரவன் அபுதாபிக்கு தப்பிச் சென்றுவிட்டார். பொலிசார்ர் இது குறித்து அபுதாபி தூதரகத்துக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, தூதரக உதவியுடன் கதிரவன் அபிதாபியில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டார்

அபுதாபியிலிருந்து நேற்று அதிகாலை 3 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்துள்ளார். அவர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர்.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்