உலகை உலுக்கிய சவுதி பத்திரிகையாளர் கொலை: உடல் பாகங்களை எடுத்து செல்லும் காட்சி வெளியானதால் பரபரப்பு

Report Print Deepthi Deepthi in மத்திய கிழக்கு நாடுகள்

சவுதி பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பல்வேறு எதிர்ப்புகளுக்கு சவுதி அரேபியா ஆளாகியுள்ள நிலையில் தற்போது வெளியாகியுள்ள வீடியோ உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,

சவுதி அரேபியாவின் புகழ்பெற்ற பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி அந்நாட்டு அரசையும், மன்னர் மற்றும் இளவரசர்களை விமர்சித்து ஆங்கிலத்திலும், அரபி மொழியிலும் கட்டுரை எழுதி வந்தார்.

அதனைத் தொடர்ந்து துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்திற்கு சென்ற அவர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்.

இந்த கொலையில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் சம்பந்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் சவுதி இளவரசருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினர்.

ஆனால், இந்த கொலைக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்று சவுதி முதலில் மறுத்தது. பின்னர் சாட்சியங்கள் வலுவாக இருந்ததைத் தொடர்ந்து ஒப்புக்கொண்டது.

இந்நிலையில் சவுதிக்கு எதிராக ஒரு வீடியோவை துருக்கி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்த செய்தியை துருக்கியின் ஹபர் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. அதில், ‘இஸ்தான்புல்லில் உள்ள சவுதி அதிகாரியின் இல்லத்துக்கு, ஜமால் கசோக்கியின் வெட்டப்பட்ட உடல் பாகங்களை 3 நபர்கள் பெரிய பை ஒன்றில் எடுத்துச் செல்கிறார்கள். இந்த இல்லம் சவுதி தூதரகத்திற்கு அருகில் தான் அமைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers