முதலாளியின் கொடுமையால் விமானத்தில் ஆடைகளை களைந்து நிர்வாணமானேன்: பயணி வாக்குமூலம்

Report Print Deepthi Deepthi in மத்திய கிழக்கு நாடுகள்

துபாயில் துபாயில் இருந்து இந்தியாவின் உத்தர பிரதேச மாநில தலைநகர் லக்னோவுக்கு வந்த 'ஏர் இந்தியா' விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் ஆடைகளை களைந்து நிர்வாணமாக நடனமாடிய வீடியோ வெளியானது.

திடீரென ஆடைகளை களைந்து விமானத்தில் நிர்வாணமாக வலம் வந்தார். விமான ஊழியர்கள், அவரது உடலில் போர்வையை சுற்றி வலுக்கட்டாயமாக அமர வைத்தனர்.

லக்னோ விமான நிலையம் வந்ததும், அந்த பயணி பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

சுரேந்திரா என்ற அந்த பயணியிடம் அதிகாரிகள் நடத்தப்பட்ட விசாரணையில் , பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவரிடம் பணியாற்றியதும், அவர் இந்தியரான சுரேந்திராவை மிகவும் கொடுமைப்படுத்தியதும் தெரியவந்தது.

இதனால் பாதிக்கப்பட்ட அவர் மனத் தடுமாற்றத்துடனும் குழப்பத்துடனும் விமானத்தில் பயணித்ததும், விமானம் பாகிஸ்தான் செல்கிறதோ என்ற கற்பனையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராடுவதற்காக ஆடையைக் களைந்துவிட்டு நடமாடியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்