8 வருடங்களாக வெளிநாட்டில் கணவர்: மன உளைச்சல் தாங்கமுடியாமல் மனைவி எடுத்த சோக முடிவு

Report Print Deepthi Deepthi in மத்திய கிழக்கு நாடுகள்
282Shares

கணவர் தன்னை விட்டு பிரிந்து 8 வருடங்களாக வெளிநாட்டில் வசித்து வருவதால் மன உளைச்சலுக்கு ஆளான மனைவி தற்கொலை முடிவை எடுத்துள்ளார்.

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ரேகா என்பவரின் ஒரே மகள் நிஷாந்தி. இரண்டாம் வகுப்பு படித்து வருகிறாள். ரேகாவின் கணவர் செல்வம் கடந்த 8 ஆண்டுகளாக சவுதி அரேபியாவில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், சம்பவம் நடைபெற்ற அன்று, வயல்வெளியில் இருவரும் மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்துக்கொள்ள முயற்சி செய்துள்ளனர். இருவரும் 90% தீக்காயம் பட்டு அபாயநிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து காவல்துறையினர் விசாரணையில் கணவர் செல்வம் இவர்களை பிரிந்து 8 வருடமாக வெளிநாட்டில் இருக்கிறார். இதனால் ஏற்பட்ட மனஉளைச்சல் காரணமாக ரேகா இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார் என கூறப்படுகிறார்.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers