பேஸ்புக் நேரலையில் இளம்பெண் தற்கொலை முயற்சி: அதிர்ச்சியில் உறைந்த தந்தை

Report Print Arbin Arbin in மத்திய கிழக்கு நாடுகள்

ஐக்கிய அமீரகத்தில் வசித்து வரும் இந்திய பெண் ஒருவர், தன்னுடைய புகைப்படம் கிண்டலுக்கு உள்ளானதால் விரக்தியில் பேஸ்புக் நேரலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

20 வயதுடைய அந்தப் பெண் தற்கொலை செய்யப் போவதாக நேற்று நள்ளிரவு அறிவித்துள்ளார். குறித்தத் தகவல் சமூக வலைத்தளங்களிலும் வேகமாக பரவியது.

இதனிடையே துபாய் பொலிசாரின் குற்றத் தடுப்புப் பிரிவினர் இந்தத் தகவலை பார்த்துள்ளனர். ஆனால், பெண்ணின் பெயர் உள்ளிட்ட தகவல்கள் எதுவும் சமூக வலைத்தளங்களில் இல்லை.

இருப்பினும், அந்தப் பெண்ணை காப்பாற்றும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டனர். தொழில்நுட்ப உதவியுடன் அந்தப் பெண் இருக்கும் இடத்தினை கண்டுபிடித்த குற்றத் தடுப்புப் பிரிவு பொலிசார், அந்தப் பகுதியில் இருக்கும் காவல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அவர்கள் அந்தப் பகுதிக்கு உடனடியாக விரைந்து சென்று பெண்ணின் தந்தையையும் கண்டுபிடித்துள்ளார்.

அவரிடம் பொலிசார் தகவலை தெரிவித்துள்ளனர். உடனடியாக பெண்ணின் அறை கதவை திறந்து பார்த்த போது, அவர் தற்கொலை செய்வதற்கு தயாராகி வந்துள்ளார்.

உடனடியாக பொலிசார் அந்தப் பெண்ணை சமாதானப் படுத்தி தற்கொலை முடிவை கைவிட வைத்துள்ளனர்.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...