வெளிநாட்டில் இருந்து வந்து மனைவியை கொன்றது ஏன்? கணவனின் வாக்குமூலம்

Report Print Deepthi Deepthi in மத்திய கிழக்கு நாடுகள்

சவுதி அரேபியாவில் பணியாற்றி வந்த நபர் தனது மனைவியை கொலை செய்துவிட்டு விபத்து என நாடகமாடிய கணவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சில தகவல்கள் அம்பலமாகியுள்ளது,

சேலம் மாவட்டத்தை சேர்ந்த ரவி - ராணி தம்பதியினருக்கு திருமணமாகி 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். ரவி சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வருகிறார்.

அவ்வப்போது விடுமுறையில் வீட்டுக்கு வந்து செல்வார். இந்நிலையில் வீட்டுக்கு வந்த அவர், மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்து தினமும் சண்டை போட்டுள்ளார்.

இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற தனது மனைவியை வலுக்கட்டாயமாக மோட்டார் சைக்கிளில் வைத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

சென்ற சிறிதுநேரத்தில், வீட்டிலிருந்த தனது மகனுக்கு போன் செய்து, அம்மா வண்டியில் இருந்து வீழே விழுந்துவிட்டார், உடனடியாக வா என அழைத்துள்ளார்.

தற்போது ரவி கைது செய்யப்பட்டு அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அங்கு சென்று பார்த்தபோது தலையில் காயத்துடன் ராணி இறந்து கிடந்தார். வண்டியில் இருந்து தவறி விழுந்துவிட்டதாக கருதி, இருசக்கர வாகனத்திலேயே உடலை வீட்டிற்குக் கொண்டு வந்தனர்.

இந்நிலையில் ராணியை அவரது கணவன் ரவி தான் கொலை செய்துவிட்டதாக ராணியின் அண்ணன் பொலிசில் புகார் அளித்ததையடுத்து, இதுகுறித்து ரவியிடம் விசாரணை நடத்தியபோது முன்னுக்குபின் முரணமாக பேசிய அவர், பின்னர் உண்மையை ஒப்புக்கொண்டு நடந்தவை குறித்து பொலிசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சவுதிக்கு வேலைக்குச் செல்லும் நான், சம்பாதிக்கும் பணத்தை மனைவிக்கு அனுப்பி வைப்பேன், அங்கு கல் உடைத்து வேலை செய்கையில், இங்கு எனது மனைவியில் பல ஆண்களுடன் சுற்றித்திரிவதாக ஊர்மக்கள் பேசினர்.

இதுபற்றி என் மனைவியிடம் விசாரித்தேன். அதற்கு அவள் சரியான பதிலைச் சொல்லவில்லை. இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில்தான் ராணியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது தலையில் கல்லால் தாக்கி கொலை செய்தேன் என கூறியுள்ளார்.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers