வருங்கால மனைவியிடம் வாட்ஸ் அப்பில் இளைஞன் சொன்ன வார்த்தை! ஆத்திரத்தில் சிறையில் தள்ளிய பரிதாபம்

Report Print Santhan in மத்திய கிழக்கு நாடுகள்

அபுதாபியில் வருங்கால மனைவியை வாட்ஸ் அப்பில் திட்டிய இளைஞருக்கும் நீதிமன்றம் இரண்டு மாதம் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

அபுதாபியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது. இரு வீட்டாரின் சம்மதத்துடனே இந்த திருமணம் நடைபெறவுள்ளதால், மணமகன் மற்றும் மணமகள் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக போனில் பேசி வந்துள்ளனர்.

திருமணத்திற்கு சில நாட்களே இருந்த நிலையில், அந்த இளைஞர் அரபு மொழியில் ஹப்லா(தமிழில் முட்டாள்) என்ற வார்த்தையை அந்த பெண்ணின் வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பியுள்ளார்.

இதைக் கண்ட அந்த பெண் தன்னை அவமானப்படுத்திவிட்டதாக கூறி, காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பொலிசார் அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது, நான் விளையாட்டாகவே அனுப்பினேன் என்று கூறியுள்ளார்.

விசாரணையில் விளையாட்டாக கூறினாலும், ஒரு மனிதரை கடுமையான வார்த்தைகளால் திட்டும் அதிகாரம் இன்னொருவருக்கு இல்லை என்பதனால் பொலிசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அதன் பின் இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, வழக்கை விசாரித்த நீதிமன்றம் 22 ஆயிரம் திர்ஹாம்ஸ் அபராதமும், கூடவே 2 மாத சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் நடைபெற வேண்டிய திருமணமும் பாதியில் போய் முடிந்துள்ளது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...