வைர கற்களால் ஜொலித்த எமிரேட்ஸ் விமானம்: உலக மக்களிடம் கவனம் ஈர்த்த புகைப்படம்

Report Print Deepthi Deepthi in மத்திய கிழக்கு நாடுகள்

வைரத்தில் ஜொலித்த எமிரேட்ஸ் விமானம் தொடர்பான புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி உலக மக்களின் கவனத்தை ஈர்த்தது.

சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்களை கவரும் வைர கற்கள் பதிக்கப்பட்ட எமிரேட்ஸ் விமானத்தின் புகைப்படம்தான் அது’. அதனுடன் ‘எமிரேட்ஸ் வழங்கும் பிளிங் 777’ என்ற கேப்ஷனுடன் அந்த புகைப்படம் பதிவிடப்பட்டிருந்தது.

அந்த பதிவு சமூக வலைதளங்களில் அடித்து உலகளவில் பலரது கவனத்தை ஈர்த்தது. இது உண்மையான விமானம் தானா? அறிவியல் வளர்ச்சி இது ஒரு புதிய மாற்றம் என்ற கருத்துக்கள் எழுந்தன.

இந்நிலையில், இது குறித்து Gulf செய்தி ஊடகத்துக்குப் பேட்டியளித்துள்ள எமிரேட்ஸ் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர், “ அது உண்மையான விமானம் இல்லை. சாரா ஷகீல் என்ற கலைஞரின் புகைப்படத்தைத்தான் நாங்கள் பதிவிட்டிருந்தோம்” என விளக்கமளித்துள்ளார்.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...