கொலை செய்துவிடுகிறார் சவுதி இளவரசர்: வெளியானது உலகை உலுக்கிய கஷோக்கியின் உரையாடல்

Report Print Deepthi Deepthi in மத்திய கிழக்கு நாடுகள்

சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகி துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் வைத்துகொலை செய்யப்பட்ட விவகாரம் உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சவுதி இளவரசர் சல்மானின் ஆட்சி முறையை விமர்சித்து வந்த காரணத்தால், இளவரசர் சல்மானின் பாதுகாவலர்கள் இந்த கொலையை செய்துள்ளதாக கூறப்பட்டது.

இந்தச் சூழலில் கஷோகி உயிரிழப்பதற்கு முன், வாட்ஸ் அப் மூலம் கனடாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒமர் அப்துல் அஜிஸுக்கு அவர் அனுப்பி வைத்த தகவல்கள் தற்போது கிடைத்துள்ளன.

அதில், பேக்மேன் வீடியோ கேமில் வருவது போல, எதிராக நிற்பவர்களை எல்லாம் பட்டத்து இளவரசர் சல்மான் கொன்று வருகிறார், ஆதரவாளர்களை கூட அவர் விட்டு வைக்க மாட்டார் என்றும் தெரிவித்துள்ளார்,

இப்படி இவர் அனுப்பிய தகவல்களை எல்லாம் சவுதி அதிகாரிகள் ஓட்டுக் கேட்டிருக்கலாம் என்றும், அதன் காரணமாகவே கஷோகி படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் ஒமர் அப்துல் அஜிஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் தனது தொலைபேசியை ஒட்டுக் கேட்கும் மென்பொருளை தயாரித்த இஸ்ரேல் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர முடிவு செய்திருப்பதாகவும் அப்துல் அஜிஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...