தலைநகரில் ராணுவத்தை குவித்த சவுதி பட்டத்து இளவரசர்: ஆட்சிக்கவிழ்ப்பு சதியா?

Report Print Arbin Arbin in மத்திய கிழக்கு நாடுகள்

சவுதி அரேபிய பட்டத்து இளவரசரின் பதவிக்கு அச்சுறுத்தல் என்ற தகவலை அடுத்து தலைநகர் ரியாத்தில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சவுதி பட்டத்து இளவரசர் சல்மான் அர்ஜென்டீனாவில் நடைபெறும் G-20 மாநாட்டில் கலந்துகொள்ள சென்றுள்ள நிலையில் கிழக்கில் இருந்து ராணுவம் மற்றும் ராணுவ தளவாடங்களை மேற்கு பகுதிக்கு மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மட்டுமின்றி பட்டத்து இளவரசர் சல்மானுக்கு எதிராக அரச குடும்பத்திலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதாகவும்,

இதன் காரணமாக ராணுவத்தை பயன்படுத்தி ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், சவுதி பட்டத்து இளவரசரால் நாட்டைவிட்டு வெளியேறிய இளவரசர் காலித் ஃபர்கான் அணி ஒன்றை உருவாக்கியுள்ளதாகவும், அவரது முக்கிய குறிக்கோளே பட்டத்து இளவரசரின் ஆட்சியை கவிழ்ப்பது என்றே கூறப்படுகிறது.

சல்மானின் ஆட்சியானது அறியாமையின் மொத்த உருவம் என விமர்சித்துள்ள இளவரசர் காலித், இது கட்டாயம் அகற்றப்பட வேண்டும் எனவும் சூளுரைத்துள்ளார்.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers