பெண் போராளிகளுக்கு உடலில் மின்சாரம் பாய்ச்சி பாலியல் சித்ரவதை: சவுதி இளவரசரின் மறுபக்கம் அம்பலம்

Report Print Deepthi Deepthi in மத்திய கிழக்கு நாடுகள்

சவுதியில் காலங்காலமாகப் பின்பற்றப்பட்டு வந்த பழைய சம்பிரதாயங்களைத் தகர்த்து பெண்கள் சுதந்திரமாகச் செயல்பட இளவரசர் சல்மான் சீர்திருத்தங்கள் மேற்கொண்டிருந்தாலும், சமீபத்தில் தனது அரசை விமர்சித்த பத்திரிகையாளர் ஜமால் கஷோகிஜியை கொலை செய்த விவகாரத்தில் உலக நாடுகள் இவர் மீது அதிருப்தியில் உள்ளனர்.

இவர் என்னதான் சவுதி நாட்டை புதிய சீர்திருத்தங்களால் பாராட்டப்பட்டாலும், அவரின் எதிர்மறையான பக்கங்கள் தற்போது அம்பலமாகியுள்ளது.

கடந்த ஆண்டு பெண் உரிமைகளுக்காகப் போராடும் பெண் சமூக செயற்பாட்டாளர்கள் 8 பேர் சவுதியின் தஹ்பன் சிறையில் அடைக்கப்பட்டு சிறை அதிகாரிகளால் சித்ரவதை செய்யப்பட்டதாக The Wall Street Journal திடுக்கிடும் செய்தி ஒன்றை வெளியிட்டது.

இதைத் தொடர்ந்து அந்த செய்தியை உறுதிப்படுத்தும் விதமாக அம்னஸ்டி இன்டர்நேஷனல் மற்றும் யூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்புகள் மூன்று பேரின் வாக்குமூலங்களை வெளியிட்டு மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறை அதிகாரிகள் அவர்கள் மீது மின்சாரம் பாய்ச்சி கொடுமை செய்துள்ளனர். கசையடிகள் கொடுத்து தூங்கவிடாமல் செய்துள்ளனர். பெண் செயற்பாட்டாளருக்கு பாலியல் தொந்தரவும் கொடுக்கப்பட்டுள்ளது.

தனிச்சிறையில் அடைத்து மனரீதியாக அவர்களைப் பாதிக்க வைத்து தற்கொலை எண்ணங்கள் மேலோங்கும் அளவுக்குச் சித்ரவதை செய்துள்ளனர். அம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பிடம் வாக்குமூலம் கொடுத்தவர்கள், தங்கள் உடலில் ஏற்பட்டிருந்த காயங்களையும் காண்பித்துள்ளனர்.

சவுதி அரசை விமர்சித்தால் கடும் தண்டனைக்கு ஆளாவார்கள், குறிப்பாக பெண் போராளிகள் இருப்பது மிகவும் கடினம்.

ஜமால் விவகாரத்திலும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், சவுதி அரசுக்கு ஆதரவாகவே செயல்படுவதாக சர்வதேச பத்திரிகையாளர் சங்கங்கள் குற்றம்சாட்டுகின்றன.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers