சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்திய பத்திரிகையாளரின் கொலை: சவுதி அரேபியாவின் புதிய விளக்கம்

Report Print Kabilan in மத்திய கிழக்கு நாடுகள்

பத்திரிகையாளர் ஜமால் கசோக்கியின் கொலை சவுதி அரேபியாவுக்கு சர்வதேச அளவில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் புதிய விளக்கம் அளித்துள்ளார்.

சவுதியின் வெளியுறவுத் துறை அமைச்சர் அதெல் அல் ஜூபிர், பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி கொலை தொடர்பாக கூறுகையில்,

‘ஜமால் மோசமான முறையில் கொல்லப்பட்டிருப்பது சர்வதேச அளவில் கண்டனத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஜமால் கொல்லப்பட்டிருப்பது மிகப் பெரிய தவறு. அவர் மரணத்துக்கு சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் தான் உத்தரவிட்டார் என்பதை நான் மறுக்கிறேன்.

எங்களுடைய மூத்த புலனாய்வு அதிகாரிகளுக்கு ஜமாலின் கொலை குறித்து தெரியாது. ஜமாலின் உடல் எங்கு இருக்கிறது என்று எங்களுக்கு தெரியாது.

ஜமாலின் கொலை தொடர்பாக நாங்கள் அனைத்து உண்மைகளையும் கண்டறிந்து, குற்றம் செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்கச் செய்ய தீர்மானமாக இருக்கிறோம்’ என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இஸ்தான்புல்லின் பெல்கிரேட் வனப்பகுதியின் அருகே ஜமாலின் உடலை தேடும் பணியில் துருக்கி அரசு மிக தீவிரமாக இறங்கியுள்ளது.

REUTERS

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers