வெளிநாட்டில் இறந்துபோன மகனின் முகத்தை பார்க்க போராடும் தாய்

Report Print Deepthi Deepthi in மத்திய கிழக்கு நாடுகள்

சவுதி அரேபியாவில் 65 நாட்களுக்கு முன் இறந்த மகனின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர நட வடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க தூத்துக்குடி ஆட்சியரி டம் பெண் மனு அளித்தார்.

தூத்துக்குடியை சேர்ந்த ச.ஜோன் ஆப் ஆர்க் என்ற பெண்மணி மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில்,

எனது மகன் ரஞ்சித் ராம்நாத்(28) கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சவுதி அரேபியாவில் உள்ள ஒரு நிறுவனத்தில் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி எனது மகன் இறந்துவிட்டதாக திடீரென தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தனர்.

ஏற்கனவே கணவரை இழந்து வாடும் நான், மகன் இறந்த செய்தி கேட்டு நொடிந்துபோனேன். எனது மகன் இறந்து 65 நாட்கள் ஆகிறது. அவன் முகத்தை ஒருமுறையாவது பார்த்தால் போதும் என்ற மன நிலையில் இருக்கிறேன்.

எனவே, எனது மகன் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers