ஒரு காலத்தில் உலகின் பெரிய கோடீஸ்வரன்: இன்று அவரது நிலை தெரியுமா?

Report Print Arbin Arbin in மத்திய கிழக்கு நாடுகள்

சவுதி அரேபியாவில் கடன் மோசடி வழக்கில் சிக்கிய சாத் குழும நிறுவனரின் அனைத்து சொத்துக்களும் ஏலம் விடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவில் பட்டத்து இளவரசராக முகமது பின் சல்மான் பதவியேற்றதில் இருந்தே அங்கு பல சீர்திருத்தங்கள் நடைபெற்றுவருகிறது.

இந்த நிலையில் கடந்த வருடமும் ஊழல் செய்த பல அரச குடும்பத்தினர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

இதில் பல வியாபாரிகளும், பொருளாதார முதலைகளும் கூட கைது செய்யப்பட்டனர். அப்படி கைது செய்யப்பட்டவர்தான் மான் அல் சனே.

இவரது சாத் குழுமம் செய்த மோசடி காரணமாக இவர் கைது செய்யப்பட்டார். அங்கே இருக்கும் வங்கிகளுக்கு இவர் 650 கோடி வரை கடன் பாக்கி அளிக்க வேண்டியிருந்தது.

சவுதியின் முன்னணி ஹெல்த்கேர் நிறுவனங்களில் ஒன்று சாத் குழுமம். இதை வைத்து பல மில்லியன் ரியால்களை சம்பாதித்த இந்த நிறுவனம் 2007ல் போர்ப்ஸ் பட்டியலில், உலகின் முக்கிய 100 நிறுவனங்களில் ஒன்றாக இடம் பிடித்தது.

இந்த நிலையில் சாத் குழும நிறுவனரை கைது செய்த சவுதி அரசாங்கம் இவர் மீதான குற்றச்சாட்டுகளின் மீது விசாரணை நடத்தவும் ஆணையிட்டது.

தற்போது ஒரே வருடத்தில் இவர் மீதான விசாரணை நடந்து முடிந்துள்ளது. இதனையடுத்து தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், இவரது சொத்துக்கள் அனைத்தையும் முடக்கும்படி ஆணையிட்டனர்.

மட்டுமின்றி இவர் வைத்திருக்கும் கடன் பாக்கி, இவரால் இழப்பை சந்தித்தவர்கள், சம்பள பாக்கியால் தவிக்கும் பணியாளர்கள் என எல்லோருக்கும் அந்த பணத்தை திருப்பி அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

இதற்கு அவரது சொத்துக்களை ஏலம் விடவும் தீர்ப்பு வழங்கினர். இந்த நிலையில் தற்போது இவரது சொத்துக்கள் ஏலம் விடப்பட உள்ளது.

ஏற்கனவே 1000 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் ஏலம் விடப்பட்டுள்ளது. இன்னும் 3700 கோடி ரூபாய் பொருட்கள் வரை ஏலம் விடப்பட உள்ளது. மொத்தமாக 4700 கோடி ரூபாய் பொருட்கள் சொத்துக்கள் ஏலத்தில் சிக்கி உள்ளது.

இதில் அவர் இருந்த பங்களா, பல ஏக்கர் நிலம், இவர் நிறுவனத்தில் இருந்த பொருட்கள், தங்கம், வைரம், பல நூறு லாரிகள், மருந்து பொருட்கள், இவரின் கார்கள் எல்லாம் ஏலம் விடப்பட உள்ளது. இது அந்த நாட்டில் மிகப்பெரிய புரட்சியாக பார்க்கப்படுகிறது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers