சாலையில் விழுந்து கதறிய பிஞ்சு குழந்தை: பெண்களுடன் மல்லுக்கட்டிய தாயார்

Report Print Arbin Arbin in மத்திய கிழக்கு நாடுகள்

சவுதி அரேபியாவின் பரபரப்பான சாலை ஒன்றில் பிஞ்சு குழந்தை கதறுவதையும் கவனிக்காமல் 5 பெண்கள் கடும் சண்டையில் ஈடுபட்ட வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

பட்டப்பகலில் நடந்த குறித்த சம்பவத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த டாக்ஸி ஓட்டுனர் ஒருவர் தமது மொபைலில் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

தலைநகர் ரியாத்தில் நடந்த இச்சம்பவத்தில் தாயார் ஒருவர் பிஞ்சு குழந்தை ஒன்றை சண்டையின் நடுவே கைவிட்டு விடுகிறார்.

சாலையில் தொப்பென்று விழும் அந்த குழந்தை வீறிட்டு அழுகிறது. ஆனாலும் கண்டுகொள்ளாத அந்த பெண்கள் கடுமையாக மோதிக்கொள்கின்றனர்.

பல முறை தரையில் இருந்து குழந்தையை தூக்கி எடுப்பதும், மீண்டும் குழந்தை தரையில் விழுவதும், வீறிட்டு அழுவதுமாக இருந்துள்ளது.

ஒரு கட்டத்தில் குழந்தையை பொம்மையை தூக்குவது போன்று ஒரு கையால் அலேக்காக தூக்கிப் பிடித்தபடி அந்த தாயார் பெண்களுடன் சண்டையிடுகிறார்.

தற்போது இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers