700 கோடியா நாங்க எப்போ அப்படி சொன்னோம்! கேரள மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

Report Print Santhan in மத்திய கிழக்கு நாடுகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நாங்கள் 700 கோடி ரூபாய் தருவதாக எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை என்று அதன் தூதர் அகம்து அல்பன்னா தெரிவித்துள்ளார்.

கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐக்கிய அரபு அமீரம் 700 கோடி ரூபாய் தர முன் வந்துள்ளதாக, கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்திருந்தார்.

ஆனால், வெளிநாட்டில் இருந்து வரும் நிதியுதவியை ஏற்க முடியாது என்ற கொள்கையை காரணமாக வைத்து, அந்த நிதியை இந்திய அரசு ஏற்காது என்ற செய்தியும் வெளியானது.

இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதர் 700 கோடி ரூபாய் தருவதாக எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை எனவும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு நிதியுதவி அளிப்பது தொடர்பாக ஆலோசித்து வருவதாகவும், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் நிதித்தொகை இன்னும் முடிவுசெய்யப்படவில்லை என்றும் அதுதொடர்பாக இன்னும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.

பெரும் சேதம் அடைந்துள்ள கேரளாவிற்கு ஐக்கிய அரபு அமீரகம் இப்படி ஒரு உதவியை அளிப்பதாக தெரிவித்திருந்ததால், அம்மக்கள் பெரு மகிழ்ச்சியில் இருந்தனர். ஆனால் தற்போது தூதுவரின் இந்த தகவலானது கேரள மக்களுக்கு ஏமாற்றத்தையும், ஒரு வித அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers