700 கோடி நிதியுதவியை கேரள அரசு ஏற்க மறுப்பது ஏன்? வெளியான உண்மை காரணம்

Report Print Deepthi Deepthi in மத்திய கிழக்கு நாடுகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஐக்கிய அரபு அமீரகம் ரூ.700 கோடி நிதி உதவி வழங்குவதாக அறிவித்துள்ளது.

இந்த நிதியை பெற வேண்டுமானால் மத்திய அரசு அனுமதி கொடுக்க வேண்டும். இதற்கும் மத்திய அரசு உதவ வேண்டும் என்று கேரளா வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஆனால், தற்போது நடைமுறையில் உள்ள வெளியுறவு கொள்கைகள் பிற நாடுகளின் அரசுகள் நேரடியாக அளிக்கும் நிவாரண நிதிகளை வாங்குவதில் சில கட்டுப்பாடுகள் உள்ளது.

பேரிடர் நிவாரண நிதியாக மற்ற நாட்டு அரசுகள் அளிக்கும் நிதியுதவியை பெறக்கூடாது எனும் கொள்கையை கடந்த 2013-ம் ஆண்டு உத்தராகாண்ட் மாநிலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட சமயத்தில் முந்தைய காங்கிரஸ் அரசு ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாட்டு அரசுகளின் நிதி உதவிகளை ஏற்பது இல்லை என்ற கொள்கை காரணமாக வெளிநாடுகளில் வசிக்கும் தன்னார்வலர்கள் அல்லது தொண்டு நிறுவனங்கள் அளிக்கும் தனிப்பட்ட நிதியுதவியை மட்டுமே இந்திய அரசால் பெற்றுக்கொள்ள முடியும்.

அதன் அடிப்படையில் தற்போது கேரள வெள்ள நிவாரணமாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ள ரூ.700 கோடி, கத்தார் அறிவித்துள்ள ரூ.35 கோடி மற்றும் மாலத்தீவுகள் அறிவித்துள்ள ரூ.35 லட்சம் நிவாரண நிதியை அரசால் பெற்றுக்கொள்ள முடியாது என மத்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளார் ராவேஷ் குமார் கூறியுள்ளார்.

எனவே, கேரளாவிற்காக உதவ முன்வந்த அனைத்து நாடுகளையும் இந்திய அரசு பாராட்டுகிறது. இதற்கு முன்னர், 2013 ஆம் ஆண்டு உத்தரகாண்ட் வெள்ளம் மற்றும் 2014 ஆம் ஆண்டு காஷ்மீரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது, உலக நாடுகள் அளித்த நிதியை ஏற்க இந்தியா மறுத்துள்ளது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...