முத்தமிட்டுக் கொண்ட காதலர்கள்: சிறை தண்டனை வழங்கிய நீதிமன்றம்

Report Print Arbin Arbin in மத்திய கிழக்கு நாடுகள்

சவுதி அரேபியாவில் காதல் ஜோடி ஒன்று முத்தமிட்டுக் கொண்ட வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவேற்றியதால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சவுதி அரேபியாவில் பெண்கள் தனியாக வாகனம் செலுத்த தடை நீக்கப்பட்டதில் இருந்து பெரும்பாலான இளம்பெண்கள் வாகனம் ஓட்ட கற்றுக் கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இளம்பெண் ஒருவர் தமது காதலருடன் வாகனம் ஓட்ட கற்றுக்கொண்டு வந்துள்ளார். ஒருகட்டத்தில் காதலன் தமது காதலிக்கு முத்தம் தந்துள்ளார்.

மட்டுமின்றி அந்த காட்சியை தமது மொபைலில் பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவெற்றியுள்ளார்.

இந்த வீடியோ பதிவானது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ள நிலையில் குறித்த காதல் ஜோடி சிக்கலில் சிக்கியுள்ளது.

திருமணத்திற்கு முன்னர் ஆணும் பெண்ணும் தனியாக சந்தித்துக் கொள்வதோ அல்லது பொதுவெளியில் முத்தமிட்டுக் கொள்வதோ கலாச்சார சீர்கேடு என கருதப்படும் சவுதி அரேபியாவில்,

இந்த காதல் ஜோடியின் முத்தக் காட்சி பட்டத்து இளவரசர் சல்மானின் பார்வைக்கு சென்றுள்ளது. இதனையடுத்து உடனடியாக இருவரையும் கைது செய்ய உத்தரவு வெளியாகியுள்ளது.

கைதான காதல் ஜோடி தொடர்பில் வேறு தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில், அவர்கள் சிறையில் தள்ளப்பட்டுள்ளனரா அல்லது என்ன ஆனார்கள் என்பது தொடர்பில் இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்